Spread the love

ஆடை இல்லாமல் நிர்வாணமாக நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் உங்கள் குடும்பத்தில் வறுமை ஏற்படும். மேலும் உங்களை பலரும் ஏமாற்றுவார்கள். நண்பர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். உங்களின் மன நிம்மதி குறையும்.

வியாபாரிகள் கனவில் தான் நிர்வாணமாக இருப்பது போல் வந்தால் வியாபாரத்தில் நஷ்டங்கள் ஏற்படும். உங்களுக்கு யாரும் உதவ முன்வரமாட்டார்கள்.

திருமணம் ஆகாதவர்கள் தான் ஆடை இல்லாமல் இருப்பது போல் கனவு கண்டால் அவர்களுக்கு நண்பர்களுடன் பிரச்சனைகள் ஏற்படும். மேலும் ஏதாவது ஒரு வழியில்அவமானம் ஏற்படும்.

நிர்வாணமாக குளிப்பது போல் கனவு கண்டால் வாழ்வில் பணக்காரர்களாக சந்தோஷமான வாழ்வு வரப்போகிறது என்று அர்த்தம்.

நீங்கள் அலுவலகத்தில் இருக்கிறீர்கள், எல்லாம் சாதாரணமாக இருக்கிறது… உங்களது சகபணியாளர்கள் முன்னிலையில் நீங்கள் ஒரு விளக்கக்காட்சியை Present செய்வதற்காக எழும்போது நீங்கள் முற்றிலும் நிர்வாணமாக இருப்பதை உணர்கிறீர்கள். இது பலரும் திரும்பத் திரும்ப கண்ட கனவு. பெரும்பாலான உளவியலாளர்களின் கூற்றுப்படி இது பொதுஇடத்தில் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் உள்ளது என்று பொருள் அல்ல. ஆனால் உங்களைப் பற்றி மற்றவர்கள் அறிந்திராத ஒன்றைப் பற்றி நீங்கள் வெட்கப்படுவதைக் குறிக்கும். ஒருசில உளவியலாளர்கள் இந்த வகையான கனவுகள் குற்ற உணர்வு அல்லது தாழ்வு மனப்பான்மையின் உணர்விலிருந்து வருவதாக கூறுகின்றனர்.
நீங்கள் ஆடை இல்லாமல் ஆபிஸ் போவது போல கனவு கண்டால் உங்களுக்கு ஆபிசில் இருக்கும் மன அழுத்தத்திலிருந்து விடுபட்ட போகிறீர்களா என்பது பொருள்.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *