பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ பகுதியைச் சேர்ந்த பெண் கிரிஸ் கிளாரியா, மாடலிங் நடிகையான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டார். ஆண்கள் பலருடன் டேட்டிங் செய்த இவர் ஆண்களே தனக்கு செட்டாக மாட்டார்கள் என தனியாக இருந்தார். அப்பொழுது இவருக்கு ஆண்களே தேவையில்லை என்ற எண்ணம் தோன்றியது. உடனடியாக அவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலர் கிரிஸ் குறித்து அதிகம் பேசினர் இந்நிலையில் இந்த செய்தி வைரலான போது தனக்கு பல ஆண்களிடமிருந்து திருமணத்திற்கு அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார்.