கேரளாவில் வெள்ளம் சூழ்ந்த நிலையில் சமையல் பாத்திரம் ஒன்றை படகாக பயன்படுத்தி இளம் காதல் தம்பதி ஒன்று திருமண ஹாலுக்கு சென்றுள்ளது.
கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கும் ரெட் அலார்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. அதேபோல், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டது.
2 அடுக்குகள் கொண்ட வீடு ஒன்று ஆற்றில் அடியோடு விழுந்து மூழ்கியது. சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்து உள்ளன. மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. பல்வேறு அணைகள் நிரம்பி வருகின்றன. 12க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களில் பெருமளவிலானோர் குழந்தைகள் ஆவர். இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.
கேரளாவில் மக்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், பல சிக்கல்களை கடந்து, இளம் காதல் தம்பதியின் திருமணம் ஒன்று நடந்தேறியுள்ளது. அதனை காண்போம்…