1966 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் அவர்களின் முயற்சியால் கட்டப்பட்ட மாத்தூா் தொட்டிப்பாலமானது ஆசியாவின் மிக உயரமானதும் மிக நீளமானதும் ஆகும். இதன் உயரம் 115 அடி, நீளம் ஒரு கிலோ மீட்டா். இந்தப் பாலத்தின் உள்ளே தண்ணீா் எடுத்துச் செல்லும் தொட்டி பகுதியானது, 7 அடி உயரமும், 7 அடி 6 அங்குல அகலமும் உடையது. இந்த ஆகாய தொட்டிப்பாலத்தை 28 பெரிய தூண்கள் தாங்குகின்றன. இந்தப் பாலம், மலையின் ஒரு பகுதியிலிருந்து தண்ணீரை விளவங்கோடு மற்றும் கல்குளம் பகுதிகளின் பாசனத் தேவைக்காகக் கொண்டு செல்கிறது.
.இங்கு ஒரு குழந்தைகள் பூங்காவும் நீராடும் பகுதியும் உள்ளது . இதை பார்வை இட நேரம் – காலை 6.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரை.
அடைவது எப்படி
மாத்தூா் தொட்டிப்பாலம் கன்னியாகுமரியில் இருந்து 48 கி.மீ , நாகர்கோயிலில் இருந்து 28கி.மீ மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து 52கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.