Spread the love

திற்பரப்பு நீர்வீழ்ச்சி (Tirparappu Waterfalls) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் இருந்து 13 கிமீ தொலைவிலும் மற்றும் குலசேகரம் பகுதியிலிருந்து 5கீ.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்விடத்தில் திற்பரப்பு மஹாதேவர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் பாண்டியர்கள் காலத்தைய ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது. தட்சனின் வேள்வியை கலைத்தபிறகு வீரபத்ர மூர்த்தியாக சிவன் இங்கு அமர்ந்திருப்பதாக இந்த கோவிலின் ஸ்தல புராணம் கூறுகிறது.. கீழ்பகுதி வட்டமாகவும் மேல்புறம் கூம்பு வடிவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. இது சிவாலய ஓட்டத்தின் மூன்றாவது கோவில் ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இவ்விடம் திகழ்கிறது.

அருவியின் அருகில் கோதையாறு திட்டத்தின் கீழ் 1951-இல் கட்டப்பட்ட திற்பரப்பு அணை உள்ளது.

திற்பரப்பு அருவியிலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருநந்திக்கரை குகைக்கோவில்கள் அமைந்துள்ளன. இங்கு சிவன் லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். இது சிவாலய ஓட்டத்தின் நான்காவது கோவில் ஆகும்.

பார்க்க வேண்டிய இடங்கள்

  1. திற்பரப்பு அருவி
  2. திற்பரப்பு மஹாதேவர் ஆலயம்
  3. திற்பரப்பு அணை
  4. திருநந்திக்கரை குகைக்கோவில்கள்

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *