டாக்கா: வங்கதேசத்தில் நடந்து வந்த மத ரீதியான கலவரங்களுக்கு எதிராக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்வதேச மேடையில் குரல் கொடுத்துள்ளார். யாருமே எதிர்பார்க்காத வகையில் மாஸ்ரப் பின் மோர்ட்டாசா திடீரென வங்கதேச இந்துக்கள் குறித்து பேசியது பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை டி 20 தகுதி சுற்று ஆட்டம். விறுவிறுப்பாக ஆட்டம் முடிந்துவிட்டது.. வங்கதேசம் படுதோல்வி அடைந்துவிட்டது. முதலில் இறங்கிய ஸ்காட்லாந்து அணி 140 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய வங்கதேசமோ 20 ஓவரில் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.