தமிழகத்தின் பெரும்பாலான மக்களால் தமிழ் எழுத்துக்களான ல, ள,ழ ண, ன, ற, ட போன்ற எழுத்துக்களை சரியாக உச்சரிக்கத் தெரிவதில்லை.
உதாரணம்:-
கல் – கள்,
மண் – மனம்,
குன்று – குண்டு
மூன்று- மூண்டு
பலம் – பழம்
புலி- புளி
மரம்- மறம்
பல்லி – பள்ளி
இந்த எழுத்துக்கள் கன்னியாகுமரி மேற்கு பகுதி மக்களால் மிக நேர்த்தியாக பேசப்பட்டு வருகிறது.
அதேசமயம் கல், புளி, குண்டு, புலி போன்ற சொற்களிலுள்ள ல, ள, ழ, ன, ண,ற, ட போன்ற எழுத்துக்களை சரியாக யாராவது பயன்படுத்தினால் அவர்கள் மலையாளிகளா என்ற கேள்வி சென்னைவாசிகளால் எழுப்பப்படுகிறது.
சமீபத்தில் தமிழை மிக நேர்த்தியாக பேசக்கூடிய குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர் சென்னையில் ஒரு கடையில் ‘புளி இருக்கா?’ என கேட்டுள்ளார், அவர் புளி என்ற சொல்லை சரியாக உச்சரித்தால் கடைக்காரர் ‘நீங்கள் மலையாளியா?” எனக் கேட்டுள்ளார். என்ன கொடுமைடா சாமி!!