திருச்சி மாவட்டத்தில் 50பைசாவுக்கு டி-சர்ட் வாங்க குவிந்த இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள சின்னக்கடை வீதியில் புதிதாக ஆண்களுக்கான “லாக் டவுன்” என்ற பெயரில் ரெடிமேடு ஷோரூம் ஒன்று திறப்பு விழா நடைபெற்றது.
புதிதாக துவங்கும் இந்த ரெடிமேட் ஷோரூம் விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் அதன் உரிமையாளர் திறப்பு விழாவை முன்னிட்டு 50 பைசாவுக்கு காலை 9 மணி முதல் 1 மணி வரை மட்டுமே டி.சர்ட் தருவதாக விளம்பர செய்திருந்தார்.