கருச்சிதைவுக்கு பிறகு கருத்தரிப்பு என்பது இயலாத விஷயம் அல்ல என்பதை தம்பதியர் புரிந்து கொள்ள வேண்டும். கருவை இழப்பது எதிர்கால கருவுறுதலை பாதிக்காது. கருச்சிதைவுக்கு பிறகு கருவுறுதலுக்கு தயாராவது எப்போது, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்
கருச்சிதைவுக்கு பிறகு தம்பதியர் கர்ப்பத்தை தள்ளி வைக்க தேவையில்லை என்று ஆய்வு ஒன்று காட்டுகிறது. கருச்சிதைவு ஏற்பட்ட மூன்று மாதங்களுக்குள் தம்பதியர் மீண்டும் கருத்தரிக்க முயற்சிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். டாக்டர் டேவிட் மேத்யூஸ் கருசிதைவுக்கு பிறகு பெண்கள் கர்ப்ப முயற்சிகளை தடுக்க கூடாது என்று கூறுகிறார்.