Spread the love

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ஆக்கிரமிப்பை மீட்கச் சென்ற போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இணையத்தில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. அதில் போலீசார் தரப்பில் அழைத்துச் செல்லப்பட்ட புகைப்படக்காரர் ஒருவரைப் போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர் தடியைக் கொண்டு துரத்தி வருகிறார். புகைப்படக்காரர் போலீசாரை நோக்கி வர, அந்த பழங்குடியினரும் அவரை பின்தொடர்ந்து வருகிறார். உடனடியாக அந்த நபரைச் சூழ்ந்துகொண்ட போலீசார், அவர் மீது தடிகளால் தாக்குகின்றனர். மேலும், துப்பாக்கியால் சுடுகின்றனர். இந்தச் சம்பத்தில் துப்பாக்கிக் குண்டு நெஞ்சில் பாய்ந்ததில் அந்த நபரின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

அவர் அசைவற்று இருக்கும்போது, அந்த புகைப்படக்காரர் அவரை கலால் எட்டி உதைக்கிறார். மேலும், அவரை கொடூரமாகத் தாக்குகிறார். இவை அனைத்தும் வைரலாக பரவும் வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதற்கு இணையத்தில் பெரும் கண்டனம் எழுந்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த சம்பவத்தை ஆவணப்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்ட புகைப்படக்காரர் பிஜய் சங்கர் பனியா கைது செய்யப்பட்டுள்ளார்.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *