Spread the love

1.விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.

2.திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.

3. ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.

4. இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

5. உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.

6. தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.

7. திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.

8. தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.

9. நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.

10. சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.

11. கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.

12. இறந்தவர் கனவில் வந்தால், இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.

13. ஆமை,மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், மனதிலே நிம்மதி பிறக்கும்.

14. மயில்,வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

15. கழுதை,குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.

16. வாத்து,குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.

17. மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் தேடி வரும்.

18. மலத்தை கனவில் கண்டால் பண வரவு வரும். மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.

19. பசு விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு நோய்கள் தாக்கும்.

20. நோய் பிடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.

21. அடிபட்டு ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.

22. முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.

23. நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.

24. குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும்,செல்வாக்கு சரியும்.

25. சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.

26. முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை பீடிக்கும்.

மேலும் பல்வேறு கனவுகள் மற்றும் விளக்கம்

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *