பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டம், தக்கலைக்கு அருகில் உள்ள பத்மநாபபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இது கல்குளம் அரண்மனை எனவும் அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தினால் கட்டப்பட்ட அரண்மனையாதலால் இது தற்போது கேரள அரசின் கட்டுபாட்டின் கீழ் உள்ளது, கேரள அரசின் தொல்லியல் துறையினால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரண்மனையைச் சுற்றி கருங்கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதியான வேளி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
பூமுகம்– கேரள பாரப்பரியத்தின்படி பூமுகம் என அழைக்கப்படுகிறது.
தாய்க் கொட்டாரம் – இந்த அரண்மனையின் மிகப் பழமையான பகுதி இந்த தாய் கொட்டாரம் ஆகும். இது பொ.வ 1550 ற்கு முன் கட்டப்பட்டது. இது கேரள நாலுகெட்டு வீடு பாணியில் கட்டப்பட்டுள்ளது.
மந்திர சாலை – மந்திர சாலை என்பது மன்னரின் அரசவையாக இருந்த கட்டடம் ஆகும். இது பிரம்மாண்டமானதாக இல்லாமல் எளிமையானதாக உள்ளது.
உப்பரிகை மாளிகை – இது நான்கடுக்கு மாளிகையாக உள்ளது. இது அரண்மனையின் மையத்தில் அமைந்துள்ளது.
நவராத்திரி மண்பம் – இது கேரள கட்டக்கலையில் இருந்து மாறுபட்டு விஜயநகர கட்டடக்கலையை பிரதிபலிப்பதாக உள்ளது.
பிற முக்கிய கட்டிடங்கள்
- ஹோமபுரம் – சடங்குகள், யாகங்கள் செய்யும் பகுதி.
- இந்திரவிலாசம் – விருந்தினர் இல்லாமாக செயல்பட்டது. இது மேற்கத்திய சாலைக் கொண்டதாக உள்ளது.
- நாடக சாலை
- தெற்குக் கொட்டாரம் -தாய்க் கொட்டாரத்தினைப் போன்றே பழமையானது. தற்போது அருங்காட்சியமாக செயல்படுகிறது.
- நீச்சல் குளம்
அடைவது எப்படி?
சென்னையில் இருந்து ரயில் மார்க்கமாக நாகர்கோவில் வரவேண்டும். நாகர்கோவிலில் இருந்து 13 கிமீ தொலைவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. நாகர்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து தக்கலை வரும் பேருந்து மூலம் இந்த அரண்மனையை அடையலாம்.
Source – Wikipedia