கைலாசா என்ற நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நாம் அனைவருக்கும் என்டர்டெயினிங் கொடுத்து வரும் நித்தியானந்தா, அவரது நாட்டின் கதவுகளை ஜூலை 21- ம் தேதி திறப்பதாகக் கூறி உள்ளார்.
இதுபற்றி நித்தியானந்தாTV என்ற Youtube Channel-ல் “வருகின்ற ஜூலை 21, 2024 அன்று மஹாகைலாசத்தினுடைய சர்வஸ்வதந்திரமாக நாங்கள் இயங்கக்கூடிய பல நிலப்பரப்புகளில் குறைந்தபட்சம் ஒன்றையாவது வெளியிட்டு உங்களை வரவேற்பதற்கு கதவுகளை திறந்து வைக்கின்றோம்” என கூறி உள்ளார் .
மேலும் கைலாசவாசியாக இப்போதே முன்பதிவு செய்யுங்கள் என +13256077111 என்ற வாட்சப் எண்ணை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாட்சப் எண் +1 என தொடங்குவதால் நித்தியானந்தா பெரும்பாலும் அமெரிக்கா அல்லது கனடாவில் இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.