உங்களுக்கு கருநாக்கா? நாக்கில் மச்சம் இருந்தால் என்ன பலன்? கருநாக்கு உள்ளோர் சாபம் பலிக்குமா? கருநாக்கு வரமா சாபமா? மச்ச சாஸ்திரம் நமது நாக்கில் உள்ள மச்சங்கள் என்ன பலனை கொடுக்கும் என்பதைப் பற்றி என்ன கூறுகிறது? கருநாக்கு உள்ளவர்கள் சொல்வது பலிக்குமா? பார்க்கலாம்.
சிலரின் நாக்கில் மச்சம் போல இல்லாமல் கரிய நிறத்தில் ஒழுங்கற்ற கறை காணப்படும். இது நமது நாக்கின் தோல்பகுதியிலுள்ள கெரட்டின் எனப்படும் புரதத்தில் ஏற்படும் ஒருசில மாறுபாடுகளால் ஏற்படும். அறிவியல் ரீதியாக அணைகினால் கருநாக்காக இல்லாமல் இருப்பதே அழகு. அறிவியல்பூர்வமாக கருநாக்கிற்கு பிரத்யேகமாக பலன் ஏதும் இல்லை.
பொதுவாகவே மச்ச சாஸ்திரம் என்கிற ஒரு சாஸ்திரம் நம் அங்கங்களில் இருக்கும் மச்சங்கள் என்ன பலனை கொடுக்கும் என்பதை விரிவாகச் சொல்கிறது. அங்க லட்சணங்களைக்கொண்டு ஒரு மனிதனுடைய குணாதிசயங்களை ஜோதிடம் எளிதாக கூறி விடும். அத்தகைய வரிசையில் கருநாக்கு இருந்தால் அவர்கள் சொல்வது பலிக்குமா மற்றும் நம் நாக்கில் மச்சம் இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
நம் முன்னோர்கள் கூற்றுப்படி கருநாக்கு உடையவர்கள் சொன்ன வாக்குகள் பலிதமாகும். உண்மையில் நாக்கில் கருமை படர்ந்து இருப்பது கருநாக்கு எனப்படும். கருநாக்கு இருப்பவர்கள் மற்றும் நாக்கில் மச்சம் இருப்பவர்கள் திடீரென கூறிவிடும் எல்லா வார்த்தைகளும் பலித்துவிடாது. அதே நேரம், அவர்கள் மனம்நொந்து சபித்தால் அது பலிக்கும்.அதே நேரம், அந்த சாபத்தின் தாக்கம் சபித்தவரையும் சமஅளவு தாக்கும். ஆகையால் கருநாக்கு என்பது வரமாகாது. கருநாக்கு உள்ளோர் கூறும் நல்ல விஷயங்கள் அவர்கள் கூறினார்கள் என்பதால் பலிக்கும் என்பதல்ல. நல்ல விஷயங்களைப் பொறுத்தவரை கருநாக்கு மற்றும் சாதாரண நாக்கு உடையோரின் வாக்குப் பலிதம் சமம். அதுபோல நாக்கில் மச்சம் இருப்பவர்களுக்கும் கருநாக்கு உள்ளோருக்கும் பலன் ஒன்றே ஆகும். சொல்லும் வார்த்தைகள் பலித்தாலும் அதனால் வரும் சம ஆபத்துகளை அவர்கள் கடந்து தான் ஆக வேண்டும்.
நாக்கில் மச்சம் இருப்பவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அவர்களால் எந்த ஒரு உண்மையையும் மனதில் போட்டு வைத்துக் கொள்ள முடியாது. ரகசியம் என்பதே இவர்களிடம் இருப்பதில்லை. மச்ச சாஸ்திரத்தின்படி நாக்கில் இருக்கும் மச்சம் அவர்களை உண்மையை உளற செய்துவிடும்.